|   | 
        
           இறைச்சிக்  கோழி வளர்ப்பு 
            
           
            கோழி இறைச்சியில் உயர் தர புரதம், தாதுப்  பொருட்கள் மற்றும் வைட்டமின்கள் தரவல்ல சரிவிகித உணவின் முக்கிய மூலதனமாகும். விரைவான  வளர்ச்சி மற்றும் அதிக உணவை இறைச்சியாக மாற்றும் திறன் கொண்ட இறைச்சிக் கோழிகள்  (பிராய்லர்) இனங்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளன. இறைச்சிக் கோழிப்பண்ணை தொழில்  ஓர் குடும்பத்தின் முதன்மை வருமான மூலதனமாகவோ அல்லது கூடுதல் வருமானம் மற்றும் ஆண்டு  முழுவதும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தக்கூடியதாகும். கோழி உரம் நல்ல மதிப்புடையதானதால்,  பயிர்களின் விளைச்சல் அதிகரிக்க பயன்படுத்தலாம். 
          இறைச்சிக் கோழி வளர்ப்பில் பயன்கள் 
          
            
              - முட்டைக்காக வளர்க்கப்படும்       கோழிப்பண்ணைகளை விட முதலீடுச் செலவு சற்றுக் குறைவு.
 
              - வளர்ப்புக் காலம் 6-7 வாரங்கள்.
 
              - ஒன்றிற்கு மேற்பட்ட கோழிகளை       ஒரே கொட்டகையில் வளர்க்கலாம்.
 
              - கால்நடைகளைக் காட்டிலும்,       குறைந்த திவனத்திலிருந்து அதிக இறைச்சி உற்பத்தி செய்யவல்லது.
 
              - முதலீடு செய்த குறைந்த நாளிலேயே       வலுமானம் ஈட்டலாம்.
 
              - ஆடு மற்றும் செம்மறியாட்டு       இறைச்சியைக் காட்டிலும், நல்ல வரவேற்பு மற்றும் தேவை அதிகம்.
 
             
           
          இறைச்சிக் கோழிப்பண்ணையின் முக்கியத்துவமும்  எதிர்காலமும். 
            இறைச்சிக் கோழி வளர்ப்பில், கடந்த 10  ஆண்டுகளில் இந்தியா கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளது. உயர்தரக் கோழிக்குஞ்சு, கருவிகள்,  தடுப்பு மருந்து மற்றும் மருந்துப் பொருட்கள் அனைத்தும் கிடைக்கின்றது. தொழில்நுட்பம்  மற்றும் தொழில்முறை வழிகாட்டிகளும் விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்கின்றது. மேலாண்மை  முறைகள் அதிகமாகி, நோய்த்தாக்குதலால் ஏற்படும் இறப்பு வீகிதமும் வெகுவாக குறைந்துள்ளது.  அநேக நிறுவனங்களும் தொழில் முனைவோருக்கு பயிற்சியளித்து வருகின்றன. இறைச்சிக் கோழியின்  எண்ணிக்கை 4 மில்லியனிலிருந்து (1971) 700 மில்லியன் அளவிற்க்கு மத்திய / மாநில அரசின்  உதவியினால் கோழிப்பண்ணையில் தொழில் முனைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இறைச்சிப்  பண்ணை தேசிய கொள்கையில், வருங்காலங்களில் நல்ல முன்னேற்றம் காணப்பட் வாய்ப்பு அதிகம். 
          இறைச்சிக் கோழிப்பண்ணைக்கு பரிந்துரைக்கப்படும்  பொது மேலாண்மை முறைகள். 
            இறைச்சிக் கோழிப் பண்ணையின் மூலம் சிறந்த  பொருளாதார இலாபம் பெற நவீன மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட முறைகளைக் கடைபிடிக்கவேண்டும்.  சில முக்கிய விதிமுறைகளும், பரிந்துரைக்கப்பட்ட முறைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 
          கொட்டகை அமைத்தல் 
          
            
              - கொட்டகை அமைக்க நீர்த்       தேக்கமாகாத உயரமான நிலங்களை தேர்வு செய்யவேண்டும்.
 
              - நீர், மின்சாரம், ரோடு       வசதி போன்றவை உள்ளவாறு ஏற்பாடு  செய்யவேண்டும்.       உயிர்க்கோழி மற்றும் தயாரான இறைச்சியையோ விற்பதற்கு சந்தை அருகில் உள்ளவாறு       ஏற்பாடு செய்யவேண்டும்.
 
              - பண்ணை ஆரம்பிக்கும் முன்       பயிற்சியும் / அனுபவமும் பெற்றபின் ஆரம்பிக்கலாம். பண்ணையிலேயே இருந்து தங்கி       அடிக்கடி கண்காணிக்கவேண்டும்.
 
              - தேவையான அளவு இடம், தீவன       இடைவெளி மற்றும் தண்ணீர் இடைவெளி விடவேண்டும்.
 
              - மழைநீர் புகாத வண்ணம், கொட்டகையின்       பக்கச் சுவர்கள் வடக்குதெற்கு திசையிலும், வாசல் மற்றும் பின் பகுதி கிழக்கு மேற்கு       திசையிலும் உள்ளவாறு அமைக்கவேண்டும்.
 
              - பலமான கூரை அமைத்து,  நிலத்திலிருந்து ஒரு அடி உயரம் உயர்த்தி அமைக்கவேண்டும்.
 
              - 3-4 அடி வரை கூரையின் மேல்       படுதாவை போட்டால் மழை நீர் இறங்காமல் தவிர்க்கலாம்.
 
              - இரண்டு கொட்டகைக்கும் இடையே       குறைந்தபட்சம் 50 அடி இடைவெளிவிட்டு கட்டவேண்டும்.
 
              - எல்லாப் பருவங்களில் சூரியஒளி       மற்றும் காற்றோட்டம் கிடைக்குமாறு. நாய் / பூனை / பாம்பு / எலிகள் புகாத வண்ணம்       கொட்டகை அமைக்கவேண்டும். 
 
              - சுற்றுச்சூழல் சுத்தமாகவும்,       ஈ / கொசு பரவாமல் பாதுகாக்கவேண்டும்.
 
              - ஒவ்வொரு குழுவையும் சுழற்சி       முறையில் கோழிகளை விற்றபின்பு, கொட்டகையை கோழி எச்சம் / எரு இல்லாமல் சுத்தம்       செய்து சுவற்றில் சுண்ணாம்பு பூசி பின் 0.5 சதவிகிதம் மாலத்தியான் / டிடிடி பூச்சிக்கொல்லி       தெளித்தபின் அடுத்த குழு குஞ்சுகளை விடவேண்டும்.
 
              - ஆழ் கூளமுறையில், நன்கு       உலர்ந்த தூய்மையான சருகுகள் (மரத்தூள், உமி) போன்றவை அறையில் நான்கு அடுக்குகள்       போட்டபின், சுத்தமான குஞ்சுத் தடுப்பான், தீவனம் மற்றும் தண்ணீர்த் தொட்டிகள்       அமைத்துப் பின்னர், கோழிக்குஞ்சுகளை விடவேண்டும்.
 
              - கூளங்கள் எப்பொழுதும் உலர்ந்து       சுத்தமாக இருத்தல் அவசியம். வாரம் இருமுறை, கூளத்தை கிளறிவிடவேண்டும். கூளங்கள்       ஈரமானாலோ, அவற்றை அகற்றிவிட்டு, புதிய கூளங்கள் இடவேண்டும்.
 
             
           
          கோழி வளர்ப்பிற்கு தேவையான கருவிகள் 
            அறிவியல்  பூர்வமாக தயார் செய்யப்பட்ட குஞ்சுத் தடுப்பான், தீவனம் மற்றும் தண்ணீர்த் தொட்டிகளையே  உபயோகிக்கவேண்டும். 
          கோழிக் குஞ்சு 
            ஒரு நாள் வயதான சிறந்த இனத்தை அங்கீகரிக்கப்பட்ட  குஞ்சுப் பொரிப்பகத்திலிருந்து வாங்கவேண்டும். பொதுவாக 2- 5 சதவிகிதம் கூடுதல் குஞ்சுகள்  வாங்கவேண்டும். 
          தீவனம் 
          
            
              - உயர்தர சரிவிகித தீவனம்       உபயோகித்து, சரியான அனுபவம் இருந்தால் பண்ணையிலேயே தீவனம் தயாரிக்கலாம்.
 
              - தீவனத்தை சுத்தமான உலர்ந்து       காற்றோட்டமான அறையில்   சேமிக்கவேண்டும்.       ஈரமான தீவனத்தில் பூஞ்சாணம் நோய்த்தாக்கம் வரும்.
 
              - நன்றாக வடிவமைக்கப்பட்ட       தீவனப் பாத்திரத்தை உபயோகிக்கவேண்டும். எலியைக் கட்டுப்படுத்தி தீவனம் சேதமாகாமல்       காக்கவேண்டும்.
 
              - ஒவ்வொரு குழுக்கோழிகளுக்கு       தனித்தனியாக தீவனப் பதிவேடு உபயோகிக்கவேண்டும்.
 
              - நோயினால் பாதிக்கப்பட்ட       கோழிகளின் தீவனம் உட்கொள்ளும் திறன் குறையும். மட்டுமல்லாது, தரம் குறைந்த தீவனமாகவோ       அல்லது கொட்டகையில் வெப்பம் அதிகரித்தாலோ, குறைந்த இறை விழுங்கும்.
 
             
           
          கோழிகளுக்கு தண்ணீர் அளித்தல் 
          
            
              - எப்பொழுதும் தூய்மையான       நீரையே அளிக்கவேண்டும்.
 
              - சிறந்த முறயைில் வடிவமைக்கப்பட்ட       கருவிகளையே நீர் அளிக்க உபயோகிக்கவேண்டும். தேவையான இடைவெளிவிட்டு தண்ணீர்க்       கருவியை வைக்கவேண்டும்.
 
              - தண்ணீர் பாத்திரங்களை தூய்மையாக       வைத்தல் அவசியம்.  தண்ணீரை நேரடி சூரிய       ஒளிப்படாத இடங்களில் சேமித்து வைக்கவேண்டும். கோடைக்காலங்களில் குளிர்ந்த நீரை       அளிக்கவேண்டும்.
 
             
           
          நோய்த் தடுப்பு / கட்டுப்பாடு 
          
            
              - தூய்மையான சுகாதார நிலை       (கோழியின் கொட்டகை), சரிவிகித உணவு, தூய்மையான நீர், ஆரோக்கியமான குஞ்சு ஆகியவையே       நோய்த் தடுப்புக்கு முக்கிய அம்சங்களாகும்.
 
              - விருந்தினரை கோழிப்பண்ணையின்       உள்ளே அனுமதிக்கவேண்டாம். அப்படி வந்தாலும், அவர்கள் கால்களை கிருமிநாசினி கரைசலில்       நனைத்து பின்னர், கால்களில் காலணியும், உடல் கவசமும் அணிந்த பின்பு அனுமதிக்கலாம்.
 
              - நோய்த் தடுப்பு மருந்து       அட்டவணையை உபயோகிக்கவேண்டும்.
 
              - நல்ல தரம் வாய்ந்த தடுப்பு       மருந்துக்களை வாங்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்பாளரிடமிருந்து மருந்துக்களை       குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில், சூரியஒளி நேரடியாகப்படாத இடங்களில் செமித்து       வைக்கவேண்டும்.
 
              - உபயோகப்படுத்திய பின் மீதமுள்ள       மருந்தை சரியாக களைந்தெறிய வேண்டும். காலாவதியான மருந்தை உபயோகப்படுத்தக்கூடாது.
 
              - இறந்தக் கோழியை உடனடியாக         புதைத்தோ / எரித்தோ அப்புறப்படுத்திவிடவேண்டும்.
 
              - பண்ணைக் கழிவுகளை தகுந்த       முறையில் வெளியேற்றவேண்டும்.
 
              - நோயினால் அதிகம் பாதிக்கப்பட்ட       கோழிகளை பண்ணையிலிருந்து நீக்கிவேண்டும்.
 
              - இறப்பு பதிவேட்டினை ஒவ்வொரு       கோழிக் குழுவிற்கும் தயார் செய்து முறையாக எழுதி வைக்கவேண்டும்.
 
              - கோழி எருவை (நோயினால்       பாதிக்கப்பட்ட) பண்ணைக் கொட்டகையிலிருந்த அப்புறப்படுத்தி சுத்தம் செய்யவேண்டும்.
 
              - எலிகளே கோழியின் நோய்க்       கிருமிகள் பரவக் காரணமாகின்றன. ஆகையால் அவற்றைத் தவிர்க்கவேண்டும். எலிப்பொறி       வைத்து எலிகளைக் கொல்லவேண்டும்.
 
              - பொதுவாக கோழிகளுக்கு மருந்துகள்       தண்ணீரில் கலந்து அளிக்கப்படுகின்றது. அவ்வாறு வைக்கும் போது முந்தைய நாள் வைத்த       நீரையெல்லாம் அகற்றிவிட்டு, புதிதாக நீருடன் மருந்தைக் கலந்து வைத்தால், நல்ல       பலன் தரும்.
 
              - மிதமான நோய்த் தாக்கத்தால்       கோழிகள் இறந்துவிடாது ஆனால் எடை அளவு குறைந்துக் காணப்படும். ஆகையால் எடை குறைவிற்கு       காரணம் என்ன என்றுக் கண்டறிந்து பின் நிவர்த்தி செய்யலாம்.
 
              - தீவிரக் கண்காணிப்பு மற்றும்       முறையான பதிவேடு கையாளுதல் ஆகியவை நல்லப் பண்ணைப் பராமரிப்பிற்கு துணைபுரியும்.
 
             
           
          பதனிடுதல் / விற்பனை 
          
            
              - கோழி இறைச்சியின் தேவையும்,       சந்தை வாய்ப்பையும் உறுதிச் செய்யது, பண்ணை அருகிலே இருக்குமாறு பண்ணை அமைக்கவேண்டும்.
 
              - சந்தை நிலவரத்தை நன்கு கவனித்து       உயிர்க் கோழியின் தேவையைக் கண்டறியவேண்டும்.
 
              - கோழிகளை 6-7 வாரங்களுக்கு       மேல் பண்ணயைில் வைத்திருக்கக்கூடாது, ஏனெனில் அதன் தீவன மாற்றத் தன்மைக் குறைய       ஆரம்பித்துவிடும்.
 
              - கோழி இறைச்சியை விற்கும்       போது நன்றாக சுத்தப்படுத்திய பாத்திரங்களையும் கருவிகளையும் பயன்படுத்தவேண்டும்.       கோழி இறைச்சியை குளிர்ந்த நீரில் 3-4 மணி நேரம் வைத்துப் பின் பாலித்தீன் பைகளில்       வைத்துக் காற்றுப் புகாமல் வைத்து அடைத்துவிடவேண்டும்.
 
              - பதனப்படுத்தப்பட்ட இறைச்சியை       விரைவில் விற்கவேண்டும். அவை பாதுகாக்க வேண்டுமெனில், ஆழ் குளிர் சாதனம் (10 முதல்       200 டி செ) உபயோகிக்கலாம். நீண்ட தூரம் எடுத்துச் செல்ல வேண்டுமெனில், குளிர்ச்       சாதன வசதியுடைய வாகனம் உபயோகிக்கவேண்டும்.
 
             
           
          
          இறைச்சிக் கோழிப் பண்ணையின்  பொருளாதாரம் முதலீடு கிரயம் 
           
            
          
          
                          வ. 
              எண்  | 
            விவரம்  | 
            குறியீடுகள்  | 
            மொத்த    அளவு  | 
            விரை    ரூ / ஒன்றுக்கு  | 
            மொத்த    விலை ரூ.  | 
           
          
            1.  | 
            கொட்டகை    மற்றும் பிறக் கட்டுமானங்கள்  | 
               | 
               | 
               | 
               | 
           
          
               | 
            கோழிக்கொட்டகை    (8)  | 
            ஒரு    பறவைக்கு ஒரு சதுர அடி  | 
            4000    சதுர அடி  | 
            90  | 
            360000  | 
           
          
               | 
            சேமிப்பு    அறை  | 
               | 
            200    சதுர அடி  | 
            100  | 
            20000  | 
           
          
               | 
            பறவை    வெட்டும் கூடம்  | 
               | 
            100    சதுர அடி  | 
            90  | 
            9000  | 
           
          
               | 
            வேலி  | 
            பின்னல்    வரை  | 
            750    அடி  | 
            20  | 
            15000  | 
           
          
            2.  | 
            நீர்    அளிக்கும் அமைப்பு  | 
               | 
               | 
               | 
               | 
           
          
               | 
            கிணறு    தோண்டல் மற்றும் கட்டுமானம்  | 
            13    அடி விட்டம் x 33 அடி ஆழம்  | 
            1  | 
            20000  | 
            20000  | 
           
          
               | 
            தண்ணீர்    தொட்டி  | 
               | 
            5200    லி  | 
            2  | 
            10000  | 
           
          
               | 
            3    குதிரைத் திறன் கொண்ட மோட்டார் பம்பு செட் மற்றும் பிற உதிரிப் பாகங்கள்  | 
            -  | 
            1  | 
            12000  | 
            12000  | 
           
          
               | 
            மின்    சாதனம்  | 
            -  | 
            4    சதவிகித சட்ட விலை  | 
            -  | 
            16160  | 
           
          
            3.  | 
            கருவிகள்  | 
               | 
               | 
               | 
               | 
           
          
               | 
            தீவனம்    மற்றும் தண்ணீர் அளிக்கும் பாத்திரம்  | 
               | 
            4000    பறவை  | 
            12  | 
            48000  | 
           
          
               | 
            இறைச்சி    வெட்டும் கருவிகள்  | 
               | 
            -  | 
            -  | 
            10000  | 
           
          
            4.  | 
            மறுசீரமைக்கக்கூடிய    செலவுகள் (முதல் 8 குழு)  | 
               | 
               | 
               | 
               | 
           
          
               | 
            கோழிக்குஞ்சு    விலை  | 
               | 
            4000  | 
            12  | 
            52000  | 
           
          
               | 
            தீவன    விலை (4080 பறவை)  | 
            3.0    கி (ஒரு பறவைக்கு)  | 
            13056    கி  | 
            11  | 
            143616  | 
           
          
               | 
            மருந்து,    தடுப்பு மருந்து, காப்பீடு, கூளம்  | 
            ரூ.    5.00 / ஒரு கோழிக்கு  | 
            கோழிகள்    4080  | 
            5  | 
            20400  | 
           
          
               | 
            கூலியாள்    சம்பளம்   | 
            3    மாதம்  | 
            1250  | 
            3  | 
            3750  | 
           
          
            5.  | 
            மொத்தச்    செலவு நிதி  | 
               | 
               | 
               | 
            754926  | 
           
          
            6.  | 
            நிகரத்    தொகை @ 25 சதவிகிதம்  | 
               | 
               | 
               | 
            18,8732  | 
           
          
            7.  | 
            வங்கிக்கடன்  | 
               | 
               | 
            -  | 
            566195  | 
           
         
        இறைச்சிக்கோழிப்பண்ணைப்  பொருளாதாரம் 
தொழில்நுட்ப  - பொருளாதார அலகுகள் 
        
          
            |                வ.எண்   | 
            விவரம்    / குறிப்புகள்  | 
            எண்ணிக்கை      | 
           
          
            1.  | 
            கோழிகளின்    எண்ணிக்கை (ஒரு வாரத்திற்கு)  | 
            500  | 
           
          
            2.  | 
            வளர்ப்பு    நாட்கள் (வாரம்)  | 
               | 
           
          
            3.  | 
            ஒரு    சுழற்சிக்கு  | 
            8    குழு  | 
           
          
            4  | 
            குழு    எண்ணிக்கை  | 
               | 
           
          
               | 
            முதல்    வருடம்  | 
            40  | 
           
          
               | 
            இரண்டாம்    வருடம் முதல்  | 
            52  | 
           
          
            5.  | 
            விற்கப்பட்ட    குழு   | 
               | 
           
          
               | 
            முதல்    வருடம் (கட்டுமானம் மற்றும் வளர்பபுக் காலம்)  | 
            33  | 
           
          
               | 
            இரண்டாம்    வருட முதல்   | 
            52  | 
           
          
            6  | 
            இடதேவை    ஒரு கோழிக்கு (ச.அடி)  | 
            1  | 
           
          
            7.  | 
            கொட்டகை    கட்ட (ரூ. / சதுர அடிக்கு)  | 
            90  | 
           
          
            8.  | 
            வேலையாட்கள்    தங்குமிடம் கட்ட  | 
            100  | 
           
          
            9.  | 
            சேமிப்பு    அறை (8 அடி)  | 
            200  | 
           
          
            10.  | 
            சேமிப்பு    அறை கட்ட (ரூ. / சதுர அடி)  | 
            100  | 
           
          
            11.  | 
            வேலையாட்கள்    அறை  | 
            150  | 
           
          
            12.  | 
            பறவை    வெட்டும் கூடம்  | 
            100  | 
           
          
            13.  | 
            பறவை    வெட்டும் கூடம் கட்ட (ரூ. / சதுர அடிக்கு)  | 
            100  | 
           
          
            14.  | 
            வலை    வேலி (ரூ. / அடி)  | 
            750  | 
           
          
            15.  | 
            வெலி    அமைக்க செலவு (ரூ. / அடி)  | 
            20  | 
           
          
            16.  | 
            மின்    இணைப்பு அளிக்க  | 
            4    சதவிகிதம்  | 
           
          
            17.  | 
            கருவிகள்    செலவு (ரூ. / பறவை)  | 
            15  | 
           
          
            18.  | 
            இறப்பு    வீதம் (6-7 வாரம்)  | 
            4    சதவிகிதம்  | 
           
          
            19.  | 
            குஞ்சுக்    கோழி விலை (ரூ. / குஞ்சு)  | 
            13  | 
           
          
            20.  | 
            இலவச    கோழிக்குஞ்சு  | 
            4    சதவிகிதம்  | 
           
          
            21.  | 
            தீவனத்    தேவை (கி / குஞ்சு)  | 
            3.2    கி  | 
           
          
            22.  | 
            தீவனம்    விலை (ரூ. / கிலோ)  | 
            3.2    கி  | 
           
          
            23.  | 
            வேலையாட்கள்    கூலி (மாதம் ரூ.)  | 
            11  | 
           
          
            24.  | 
            இதரச்    செலவுகள் (மருந்து, தடுப்பு மருந்து, காப்பீடு, கூளம் ) ரூ / பறவை  | 
            8  | 
           
          
            25.  | 
            சராசரி    எடை அளவு (கி)  | 
            1.5    கி  | 
           
          
            26.  | 
            இறைச்சிக்    கோழி விலை  | 
            40  | 
           
          
            27.  | 
            விற்பனை    விலை  | 
            60  | 
           
          
            28.  | 
            எருவிலிருந்து    வருமானம் (ஒரு குஞ்சு / ரூ)  | 
            1  | 
           
          
            29.  | 
            சாக்குப்    பையின் வருமானம் (ரூ / ஒரு )  | 
            10  | 
           
          
            30.  | 
            கொட்டகையின்    தேய்மான சதவீதம்  | 
            5    சதவிகிதம்  | 
           
          
            31.  | 
            கருவிகளின்    தேய்மான சதவீதம்  | 
            10    சதவிகிதம்  | 
           
          
            32.  | 
            சாக்குப்    பையின் எண்ணிக்கை  | 
            13.3  | 
           
          
            33.  | 
            சராசரி    பண விகிதம்  | 
            25  | 
           
          
            34.  | 
            வட்டி    விகிதம்  | 
            12    சதவிகிதம்  | 
           
          
            35.  | 
            மறு    கடன் திருப்பிச் செலுத்தும் காலம் (ஆண்டு)  | 
            6  | 
           
          
            36.  | 
            கருணைக்காலம்    (ஆண்டுகள்)  | 
            0.5    சதவிகிதம்  | 
           
          
            37.  | 
            கட்டுமான    காலம் (மாதம்)  | 
            3  | 
           
          
            38.  | 
            கொட்டகை    ஓய்வுக்காலம் (நாட்கள்)  | 
            7-10  | 
           
         
        இறைச்சிக்  கோழி பொருளாதாரம் 
அட்டவணை 
        
          
            |               வருடம்  | 
            புதிய    குழு எண்ணிக்கை  | 
            விற்கப்பட்ட    குழு எண்ணிக்கை  | 
           
          
            I  | 
            40  | 
            33  | 
           
          
            II  | 
            52  | 
            52  | 
           
          
            III  | 
            52  | 
            52  | 
           
          
            IV  | 
            52  | 
            52  | 
           
          
            V  | 
            52  | 
            52  | 
           
          
            VI  | 
            52  | 
            52  | 
           
         
          
        குறிப்பு 
        
          
            - முதல் ஆரம்பக் காலம் 3 மாதம்,       கட்டுமானக் காலமாக கருதப்படுகிறது ஆகையால் அந்தக் காலத்தில் மொத்தம் 40 குழுக்கள்       வளர்க்கப்படும்.
 
            - ஆறாவது ஆண்டில், மொத்தம்       7 குழுக்கள் உள்ள 4 வார வயதுள்ள பறவைகள் இருக்கும். அவற்றின் விலையையும் கணக்கீட்டில்       சேர்த்துக் கொள்ளலாம்.
 
            - சராசரியாக ரூ. 35 / பறவைக்கு       முடிவு குழுவாக கணக்கீடு செய்யலாம்.
 
           
         
        
        வரவு  - செலவுக் கணக்கு 
        
          
            |               வ.எண்  | 
            குறிப்புகள்  | 
            I  | 
            II  | 
            VI  | 
            X  | 
           
          
            1.  | 
            விலை  | 
               | 
               | 
               | 
               | 
           
          
            1.  | 
            முதலீட்டு    விலை  | 
            235160  | 
            0  | 
            0  | 
            0  | 
           
          
            2.  | 
            தொடர்    வைப்புத் தொகை  | 
               | 
               | 
               | 
               | 
           
          
               | 
            கோழிக்குஞ்சின்    விலை  | 
            260000  | 
            3380000  | 
            3380000  | 
               | 
           
          
               | 
            தீவன    விலை  | 
            718080  | 
            933504  | 
            933504  | 
               | 
           
          
               | 
            இதரச்    செலவு  | 
            95110  | 
            132000  | 
            132000  | 
               | 
           
          
               | 
            கூலியாள்    செலவு  | 
            15000  | 
            15000  | 
            15000  | 
               | 
           
          
               | 
            மொத்த    விலை  | 
            1623350  | 
            1418504  | 
            1418504  | 
               | 
           
          
            2.  | 
            இலாபம்  | 
               | 
               | 
               | 
               | 
           
          
            1.  | 
            பறவைகள்    விற்பனை  | 
            990000  | 
            1560000  | 
            1560000  | 
               | 
           
          
            2.  | 
            கோழி    எரு விற்பனை  | 
            16500  | 
            26000  | 
            13000  | 
               | 
           
          
            3.  | 
            சாக்குப்    பை விற்பனை  | 
            8122  | 
            11286  | 
            11286  | 
               | 
           
          
            4.  | 
            தேய்மான    விலை  | 
               | 
               | 
               | 
               | 
           
          
               | 
            கொட்டகை  | 
            0  | 
            0  | 
            296977  | 
               | 
           
          
               | 
            கருவிகள்    (நீர் அளிக்கும் இயந்திரம்)  | 
            0  | 
            0  | 
            59074  | 
               | 
           
          
            5.  | 
            கடைசி    கையிருப்பு கால்நடைகள்  | 
            0  | 
            0  | 
            122500  | 
               | 
           
          
            6.  | 
            மொத்த    இலாபம்  | 
            1014622  | 
            159786  | 
            2075838  | 
               | 
           
          
               | 
            நிகல    லாபம்  | 
            608728  | 
            178782  | 
            178782  | 
               | 
           
         
        நிகர  இலாபத்தின் மதிப்பு 
        
          
            - விலை                                     5546430.80
 
            - இலாபம்                                 5745128.16
 
            - நிகர லாபம்                            190718
 
            - வரவு - செலவு                        01:01.1           
 
            - உள்நாட்டு வரவு விகிதம்    > 27 சதவிகிதம்
 
           
         
        இறைச்சிக்  கோழிப் பண்ணையில் 
          நில  இடைவெளி, தீவன இடைவெளி மற்றும் தண்ணீர் இடைவெளி தகவல்கள் 
        
          
            |                வயது   | 
            தரை    சதுர அடி / குஞ்சு  | 
            தீவன    இடைவெளி (அங்குலம்)  | 
            தண்ணீர்    இடைவெளி (அங்குலம்)  | 
           
          
            1.  | 
            0.2  | 
            1.5  | 
            0.5  | 
           
          
            2.  | 
            0.2  | 
            2.0  | 
            0.7  | 
           
          
            3.  | 
            0.3  | 
            2.0  | 
            0.7  | 
           
          
            4.  | 
            0.4  | 
            2.5  | 
            0.8  | 
           
          
            5.  | 
            0.6  | 
            2.5  | 
            0.8  | 
           
          
            6.  | 
            0.8  | 
            3.0  | 
            1.0  | 
           
          
            7.  | 
            0.9  | 
            3.0  | 
            1.0  | 
           
         
          
        உடல்  எடை, தீவனம் உட்கொள்ளுதல் மற்றும் தீவன மாற்றும் திறன் 
        
          
            |               வயது  | 
            உடல்    எடை மற்றும் வளர்ச்சி  | 
            தீவனம்    உட்கொள்ளுதல்  | 
            தீவன    மாற்றும் திறன்  | 
           
          
            1.  | 
            7  | 
            0.17  | 
            -  | 
            0.1  | 
            0.1  | 
            0.81  | 
            0.81  | 
           
          
            2.  | 
            14  | 
            0.28  | 
            0.15  | 
            0.23  | 
            0.34  | 
            1.53  | 
            1.21  | 
           
          
            3.  | 
            21  | 
            0.48  | 
            0.2  | 
            0.34  | 
            0.67  | 
            1.64  | 
            1.4  | 
           
          
            4.  | 
            28  | 
            0.73  | 
            0.25  | 
            0.47  | 
            1.14  | 
            1.93  | 
            1.50  | 
           
          
            5.  | 
            35  | 
            100  | 
            0.29  | 
            0.63  | 
            1.17  | 
            2.16  | 
            1.77  | 
           
          
            6.  | 
            42  | 
            1.32  | 
            0.33  | 
            0.74  | 
            2.51  | 
            2.26  | 
            1.89  | 
           
          
            7.  | 
            49  | 
            1.66  | 
            0.33  | 
            0.82  | 
            3.32  | 
            2.47  | 
            2.01  | 
           
         
        இறைச்சிக் கோழி கலவைப்பொருட்கள் 
        
          
            |                மூலப்பொருள்   | 
            அளவு  | 
           
          
            1  | 
            2  | 
            3  | 
            4  | 
           
          
            மக்காச்சோளம்  | 
            51  | 
            58.5  | 
            47.5  | 
            53.25  | 
           
          
            கோதுமை    உமி  | 
            10  | 
            2.5  | 
            7.75  | 
            -  | 
           
          
            மணிலா    புண்ணாக்கு  | 
            25.2  | 
            25  | 
            29.4  | 
            29.4  | 
           
          
            மீன்    துகல்  | 
            10.8  | 
            11  | 
            12.6  | 
            12.6  | 
           
          
            கால்சியம் 
              பாஸ்பேட்  | 
            1  | 
            1  | 
            1  | 
            1  | 
           
          
            சுண்ணாம்பு  | 
            0.5  | 
            0.5  | 
            0.5  | 
            0.25  | 
           
          
            உப்பு  | 
            0.5  | 
            0.5  | 
            0.5  | 
            0.25  | 
           
          
            முன்கலவை  | 
            1  | 
            1  | 
            1  | 
            1  | 
           
          
            மொத்த    எடை  | 
            100  | 
            100  | 
            100  | 
            100  | 
           
          
            பண்படாத    புரதம் (சதவிகிதம்)  | 
            22.1  | 
            22  | 
            24  | 
            24  | 
           
          
            1    கிலோவில் கிடைக்கும் சக்தி  | 
            2800  | 
            3000  | 
            2800  | 
            3000  | 
           
         
        முன்கலவை  - 100 கிலோ தீவனத்திற்கு 
        
          
            |                விவரங்கள்   | 
            பொருட்கள்  | 
            அளவு    (கிராம்)  | 
           
          
            விட்டமின்    (கிராம்)  | 
            விடா    பிளான்ட்  | 
            25  | 
           
          
               | 
            ஃபோலிக்    அமிலம்  | 
            0.1  | 
           
          
               | 
            விட்டமின்    இ  | 
            4  | 
           
          
               | 
            நையாசின்  | 
            10  | 
           
          
               | 
            பைரிடாக்ஸின்  | 
            1  | 
           
          
               | 
            கோலைன்    ஃகிளோரைட்  | 
            30  | 
           
          
            மினரல்    (கிராம்)  | 
            ஃபெரஸ்    சல்பேட்  | 
            20  | 
           
          
               | 
            துத்தநாக    சல்பேட்  | 
            25  | 
           
          
               | 
            தாமிர    சல்பேட்  | 
            25  | 
           
          
               | 
            மெக்னீசிய    சல்பேட்  | 
            25  | 
           
          
               | 
            பொட்டாசியம்    சல்பேட்  | 
            0.1  | 
           
          
            அமினோ    அமிலம் (கிராம்)  | 
            லைசின்    எச்சிஎல்   | 
            220  | 
           
          
               | 
            மித்தியோனைன்  | 
            160  | 
           
         
         
        
        தடுப்பு மருந்து அட்டவணை 
        
          
            |                நோய்களின்    பெயர்   | 
            தடுப்பு    மருந்தின் பெயர்  | 
            தடுப்பு    மருந்து அளிக்கும் நாள் / வாரம்  | 
            மருந்து    அளிக்கும் இடம்  | 
            குறிப்பு  | 
           
          
            மாரெக்ஸ்    நோய் / கோழி வாத நோய்  | 
            ஹெர்பல்    வைரஸ் டர்க்கி தடுப்பு மருந்து  | 
            ஒரு    நாள் வயது  | 
            உபதோள்  | 
            வாழ்நாள்    எதிர்ப்புத் திறன்  | 
           
          
            வெள்ளைக்    கழிசல் நோய்  | 
            ஆர்டி    தடுப்பு மருந்து  | 
            4-7    நாள் வயது  | 
            மூக்கினுள்    உள்கண்  | 
            10    வார எதிர்ப்புத்  திறன்  | 
           
          
            கோழி    அம்மை  | 
            குஞ்சு    கரு ஏற்றுக்கொள்ளும் கோழி  | 
            6-8    வார வயது  | 
            இறகு    வலை முறை  | 
            வாழ்நாள்    எதிர்ப்பு திறன் நோய்ப் பரவும் பகுதியில்  | 
           
         
          
        கோழி வளர்ப்பின் போது இரத்தக் கழிசல்  நோய் பரவல் அதிகம் காணப்படும். இந்நோயின் கிருமிகள் மிக ஈரமான கூளங்களிலிருந்து பரவக்கூடியவை,  ஆகையால், கூளங்களை, உலர்ந்த நிலையில் பாதுகாக்கவேண்டும். நோய்க்கிருமி கலந்த உணவை  அளிக்கக்கூடாது. நோய்ப்பரவல் அதிகரிக்கும் போது, மருந்தினை நீரில் கலந்து பரிந்துரை  செய்யலாம். 
        வங்கிகள் / தேசிய ஊரக மேம்பாட்டு  வங்கி மூலம் இறைச்சிக் கோழி வளர் பண்ணை அமைக்க நிதியுதவி 
          தேசிய ஊரக மேம்பாட்டு வங்கி என்பது கொள்கை,  திட்டம் மற்றும் செயல்முறை (வேளாண் வயலின் உதவி) போன்ற அனைத்து காரியங்களையும் கவனிக்கும்  தலைமை நிறுவனமாகும். முதலீடு மற்றும் உற்பத்திக் கடனினை அளிக்கும் முகமை நிறுவனமாக  செயலாற்றி வருகின்றது. தொழில்நுட்ப வல்லுநரின் உதவியுடன் திட்டங்களை ஆய்வுசெய்து நிதியுதவி  அளித்து வருகின்றது. 
        இறைச்சிப் பண்ணை அமைக்க தேசிய மற்றும்  ஊரக மேம்பாட்டு வங்கி மூலம் கடன் பெற வசதி வாய்ப்புகள் உள்ளன. வங்கிக் கடன் பெற விவசாயிகள்  அருகிலுள்ள வணிக வங்கி, கூட்டுறவு மற்றும் மண்டல வங்கிகளை அணுகி கடன் பெறலாம். தொழில்நுட்ப  அதிகாரிகள் அல்லது வங்கி மேலாளர்களின் உதவியுடன் கடன் பெறுவதைப் பற்றிய விவரங்களைப்  பெற்று பண்ணை அமைக்கும் திட்டம் குறித்த ஆலோசனையும் பெறலாம். 
        கோழிப்பண்ணை அமைக்க விரிவான திட்ட அறிக்கை  தயார் செய்ய வேண்டும். நிதியுதவி, இறைச்சிக் கோழிக் கொட்டகை மற்றும் கருவிகள் வாங்கவும்  தரப்படுகிறது. முதல் ஏழு வாரங்களுக்கு தேவையான ஒரு நாள் வயதுடைய கோழிக்குஞ்சு, தீவனம்,  மருந்து மற்றும் வேலையாட்கூலி ஆகியவற்றின் செலவும் கணக்கில் கொள்ளலாம். 
           
          நிலம், மேம்பாட்டுத் தோகை, வேலி, நீர்  மற்றும் மின்சார வசதி, தேவையான வேலையாட்கள் வீடு, சேமிப்பு கிடங்கு, வாகனம், இறைச்சி  வெட்டும் அறை, பதன்படுத்துதல் மற்றும் குளிர்ச்சாத சேமிப்பு ஆகியவையும் கணக்கில் கொள்ளலாம்.  நிலத்தில் விலை, கடனின் கணக்கில் சேர்க்கப்படமாட்டாது. ஆனால் அவை பண்ணை அமைக்க வாங்கப்பட்டால்,  அது பண்ணை அமைப்பாளரின் இறுதி நிலைத் தொகையாக, திட்டத்தின் முழுத் தொகையின் 10 சதவிகிதமாக  கருதப்படும். 
           
  வங்கிக் கடன் வாங்க திட்டமிடுதல் 
          கால்நடைத்துறை,  தொழில்நுட்ப ஆலோசகரிடம் ஆலோசனைப பெற்று, விவசாயிகள் தங்கள் பண்ணைத் திட்டத்தை மேற்கொள்ளலாம்.  கூடுமானால், தொழில் முனைவோர் அருகிலுள்ள பாரம்பரிய பண்ணையை அணுகி அனுபவங்களையும்  இலாபகரத்தையும் பற்றித் தெரிந்து கொள்ளலாம். 6-7 வாரங்கள் கழித்து இறைச்சிக் கோழியை  விற்கும் வகையில் அதன் தேவையையும், சந்தை வாய்ப்பையும் அருகிலேயே இருக்குமாறு சந்தையைப்  பற்றிய விவரமும் அறிந்திருக்கவேண்டும். பண்ணை ஆரம்பிக்கும் முன் நல்ல பயிற்சிக்கும்,  அனுபவமும் இருந்தால் மிகவும் சிறந்தது.  
        திட்டத்தில், நிலம், தண்ணீர் மற்றும் மின்சார  வசதி, சந்தை விவரம், பயிற்சி வசதி மற்றும் தொழில் முனைவோர்க்கான வசதி, மாநில அரசிடமிருந்து  கிடைக்கும் கடன் வசதி, கோழி வளர்ப்பு சங்கம் மற்றும் குஞ்சுப் பொறிப்பகங்களிலிருந்து  கிடைக்கும் அனைத்து வசதிகளையும் குறிப்பிட வேண்டும். இத்திட்டத்தில் மேலும், பண்ணையின்  கோழி உற்பத்தித் திறன், மொத்தத் திட்டத்தின் செலவுகள் பண்ணையாளர் செலுத்த வேண்டிய  தொகை மற்றும் வங்கியிடமிருந்து பெற வேண்டியத்தொகை, ஆண்டு செலவு, வரவு மற்றும் இலாபம்,  கடன் தொகை மற்றும் வட்டி செலுத்துதல் ஆகியவற்றின் விவரமும் அளிக்கவேண்டும். 
           
            சிறந்த திட்டத்திற்கான தேவைகள் 
          வங்கி அதிகாரிகள் நல்லத்திட்டத்தை வடிவமைக்கவும்,  வங்கி விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்தல் ஆகியவற்றில் உதவி பெறலாம். பூர்த்தி செய்த  விண்ணப்பத்தை அருகிலுள்ள வங்கிகளில் சமர்ப்பிக்கலாம். வங்கி சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்தை  நிதி நிலைமை மற்றும் தொழில்நுட்ப தன்மையையும் பரிசோதிக்கும். 
        தொழில்நுட்ப தன்மை 
        
          
            - தட்பவெப்ப நிலை அப்பகுதியின்       தொழில்நுட்ப விதிகள்
 
            - இடுபொருள், கால்நடை மருத்துவம்,       சந்தை பயிற்சி ஆகியவற்றில் பண்ணையாளரின் உள்ளகட்டமைப்பு வசதிகள் ஆகியவை.
 
           
         
        நிதி நிலைமை 
        
          
            - ஒரு பொருளின் அடக்க விலை       மற்றும் கடன் தேவை 
 
            - கோழிக்குஞ்சு, தீவனம்,       மருத்துவ வசதி, கூலியாட்கள் மற்றும் பிற செலவுகள்.
 
            - உற்பத்திப் பொருள் விற்பனை       மூலம் கிடைக்கக்கூடிய ஆதாயம்
 
            - ஆண்டின் மொத்த வருமானம்       (வரவு - செலவு)
 
            - வரவு - செலவு மதிப்பிடுதல்
 
            - கடன் திருப்பி செலுத்துதல்       அட்டவணை
 
           
         
        பிற  ஆவணங்களான, கடன் பெற விண்ணப்பப் படிவம், இறுதி நிலை, பணத் தேவை ஆகியவைகளும் பரிசோதிக்கப்படுகின்றது.  தொழில் மற்றும் நிதி ரீதியான எல்லாம் சரிபார்த்துப் பின்பு, நில ஆய்விற்கான சோதனைகள்  மேற்கொள்ளப்படும். 
        வங்கிக்கடன்  அனுமதி மற்றும் அதன் தொகை பட்டுவாடா செய்தல் 
        பண்ணையின் தொழில்நுட்பம் மற்றும் நிதி  நிலைமை பரிசோதனைக்குப் பின், வங்கி அத்திட்டத்திற்கான அனுமதி அளிக்கும். பணம் பட்டுவாடா  செய்தல் இரண்டு அல்லது மூன்று காலக்கட்டங்களில் தரப்படும், முதல் தவணை, ஆரம்ப கட்டிடம்  கட்டக் கருவிகள் வாங்க, கோழிக்குஞ்சு, கோழித்தீவனம் மற்றும் தடுப்பு மருந்து ஆகியவை  வாங்க அளிக்கப்படும். பணம் உபயோகிக்கப்பட்ட விதத்தை பரிசீலனை செய்த பின் மற்றத் தொகையும்,  படிப்படியாகத் தவணை முறையில் தரப்படும். 
           | 
          |